சிங்கப்பூரில் சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் அரக்கோணம் மங்கம்மாபேட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் திவாகர் ஜூனியர் பிரிவில் விளையாடி இரண்டு தங்கம் என்று சாதனை படைத்தார். அதேபோல் இந்தியா யங் ஜூனியர் போட்டியில் 7 ம் வகுப்பு படிக்கும் அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்த சர்வாணி என்ற மாணவி 2 வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மாஸ்டர் யுவராஜ் லோகநாதன் தலைமையில் 2 தங்கப்பதக்கம் வென்ற வீரர் திவாகர், 2 வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை சர்வாணி ஆகியோருக்கு அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பள்ளி தாளாளர் விமலா உற்சாக வரவேற்பு அளித்தார்.
பதக்கம் என்று நாடு திரும்பிய தங்கம் வென்ற வீரர் திவாகர், வெள்ளி வென்ற வீராங்கனை சர்வாணி ஆகியோருக்கு அரக்கோணம் ரயில்வே
மற்றும் பயிற்சியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களை பாராட்டி ஸ்டேஷனில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எஸ்.எம்.எஸ் விமல் மெட்ரிக் பள்ளி வாழ்த்தினர். தாளாளர் விமலா, கலாம் யுவி அறக்கட்டளை நிர்வாகி லோகநாதன், பயிற்சியாளர் கோதண்டன் இந்த மாணவர்களுக்கு கலாம் யு வி அறக்கட்டளை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.