நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பாக முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
076 54 53 454 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp மூலம் தகவல்கள், முறைப்பாடுகள், காணொளிகள் அல்லது படங்களை அனுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1997 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.