சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான யுக்ரேன் சிறைக்கைதிகள் விசாரணைகளுக்காக ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மரியூபோல் நகரிலிருந்து குறித்த கைதிகள் ரஷ்யாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய சட்ட அமுலாக்க பிரிவை மேற்கோள்காட்டி டாஸ் எனும் செய்தி முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே சிறை கைதிகள் ரஷ்யாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.