இஸ்ரேல் யுத்த தாங்கி அழிப்பு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. 6G தொழில்நுட்பத்தில் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மீற்றர் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கு சொந்தமான ரபாயல் உயர் பாதுகாப்பு நிறுவனம் புதிய ஏவுகணையை தயாரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்திலிருந்து குறித்த ஏவுகணையை இயக்கக்கூடிய திறனும் காணப்படுவதாக இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன.