இரத்தினபுரி பிரதான நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று மாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தின் உரிமையாளர் பள்ளி வாசல் சென்றிருந்த போது இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி காவற்துறையினர் தெரிவித்தனர்.
இரத்தினபுரி மாநகர சபை தீயணைக்கும் படையின் உதவியோடு தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக இரத்தினபுரி காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தீ பரவல் சம்மந்தமான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
