தலைமன்னார் பகுதியில் நேற்றைய தினம் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள கியான்சிதா என்ற சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று இடம் பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனையில் இக்குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
பத்து வயதுடைய இந்தச் சிறுமியின் இந்தக் கொடூர கொலையை கண்டித்து பலரும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குற்றத்தை புரிந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை கொடுப்பதோடு இப்பகுதியில் இடம்பெறும் போதை வஸ்து விடயங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் மக்கள் தங்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
