யுக்ரேனுக்கு ஐரோப்பிய சங்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொடுக்க தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
யுக்ரெனின் க்யூ நகருக்கு 3 நாடுகளின் தலைவர்களும் விஜயம் செய்துள்ளனர். அவர்கள் போலந்திலிருந்து ரயில் மூலம் யுக்ரேனை சென்றடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
யுக்ரேன் எப்போதும் ஐரோப்பிய குடும்பத்தின் உறுப்பு நாடு என ஜேர்மன் ச்சான்சலர் ஒலெப் சோல்ஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய சங்கத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளும் , ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனின் வெற்றியை எதிர்பார்த்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இத்தாலி தலைவரும் அவரது கருத்தை ஆமோதித்துள்ளார். யுக்ரேனுக்கு ஐரோப்பிய சங்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொடுக்க முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக 3 நாடுகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.