Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை அணி வெற்றி
விளையாட்டு

இலங்கை அணி வெற்றி

ThanaBy ThanaJune 17, 2022Updated:January 9, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 47.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 34 ஓட்டங்களை பெற்றனர். அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் குனெமன் மற்றும் மெக்ஸ்வேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்வெப்ஸன் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

டக்வத் லுயிஸ் முறைப்படி அவுஸ்ரேலிய அணிக்கு 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிஇ 37.1 ஓவர்கள் நிறைவில் 189 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது.. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. கிளேன் மெக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சாமிக்க கருணாரத்ன மூன்று விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர, தனஞ்ச டி சில்வா மற்றும் துமித் வெல்லாலகே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாகஇ இலங்கை அணியின் சமிக்க கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமநிலைப்படுத்தியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    விறுவிறுப்பான ஆட்டம்: எகிப்தை 3-2 என வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது அர்ஜென்டினா!

    July 8, 2026

    17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டி – தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அபார வெற்றி

    July 7, 2026

    உலகக் கிண்ணத்திலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ: ஸ்பெய்ன் காலிறுதிக்கு முன்னேற்றம்!

    July 7, 2026

    2026 உலகக் கிண்ண  கால்பந்து தொடரிலிருந்து வெளியேறிய பிரேசில் – வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த நோர்வே 

    July 6, 2026
    Editors Picks

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.