மலேசியாவில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற சர்வதேச ‘பெஸ்டா ஹொக்கி’ (Pesta Hockey Tournament) தொடரில் பங்கேற்பதற்காக, மாத்தளை இந்து தேசியக் கல்லூரியின் திறமைமிக்க வீரரான உதயகுமார் திலான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து உருவாகி, சர்வதேச அளவிலான போட்டியில் நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள இவருக்கு, மாத்தளை இந்து தேசியக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தனது அபாரமான திறமையாலும் அர்ப்பணிப்பான பயிற்சியினாலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ள திலான், மலேசியாவில் நடைபெறவுள்ள இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கைக்கு பெருமை தேடித்தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
