ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஒருசில பகுதிகளில் பாரிய நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வின் தாக்கம் பதிவாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியின் ஒருசில பிரதேசங்களிலும், பாகிஸ்தானின் ஒருசில பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு கோஸ்ட் நகரத்திலிருந்து 44 கிலோ மீற்றர் தூரத்தில் 51 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளமை தொடர்பான காட்சிகளை ஒருசிலர் வீடியோ பதிவுகளாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.