பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாவை நிதியுதவியாக வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியிருந்தது. அதில் 50 வீதமான தொகையே வழங்கப்பட்டது. எஞ்சிய தொகை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு சில நிபந்தனைகளுடன் எஞ்சிய நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முதற்கட்டமாக 7 ஆயிரத்து 500 கோடி ரூபா வழங்கப்படவுள்ளது. இதேவேளை எரிபொருளுக்கான வரியை 5 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.