மரம் முறிந்து விழுந்ததில் இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பேர் வைத்தியசாலையில்.
இரத்தினபுரி கொல்லகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் இரத்தினபுரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை பலாங்கொடை ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அத்தோடு குறித்த சம்பவத்தை பார்வை இட சென்றவர் மீது கித்துள் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த நபர் காயமடைந்துள்ளார்.
அதேவேளை பலாங்கொடை வட்டவல பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மூவரும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்னும் சில வீடுகள் பகுதி அளவில் சோதடைந்துள்ளன.
M.F.M.Ali
Rathnapura
