வெளிநாட்டில் தொழில்புரியும் பெண்கள் தாங்கள் உழைத்த சொந்த பணத்தில் பொருட்கள் சேர்த்து அதிகமாக கஷ்டப்பட்டுத்தான் சொந்த ஊர்களுக்கு அனுப்புகிறார்கள். அப்படி அனுப்பும் பொருட்கள் பணத்தினை மோசடி கும்பல்கள் அவர்கள் உழைப்பினை பறிக்கிறார்கள். சரியான நேரத்திற்கு பொருட்களை கையளிப்பதில்லை. பலரின் பொருட்களில் பாதியை திருடிக்கொண்டு மீதியைக் கையளிப்பதாகவும் தகவல். சிலரின் பொருட்களை மொத்த பணத்தையும் பெற்றுக்கொண்டு கையளிப்பதே இல்லையாம். இன்னும் பலர் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
இது போன்ற மக்களின் வியர்வையை உழைப்பை ஏசி அரையில் இருந்துக்கொண்டு சூரையாடும் cargo serviceகள் மோசடி கும்பல்களை என்ன செய்யலாம். பாதிக்கப்பட்டவர்கள் எந்த மேலிடம் சென்றாலும் அவர்களுக்கான சரியான தீர்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே வெளிநாடுகளிலிருந்து உங்கள் வீடுகளுக்கு பிள்ளைகளுக்கு நீங்கள் அனுப்பும் பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சரியான கார்கோ சேர்விஸ்யுக்களை நாடுங்கள்.
ராகலை சசி
