இலங்கையில் முன்னர் நிறுத்தப்பட்டிருந்த தனது திட்டங்களை, ஜப்பான் உடனடியாக மீள ஆரம்பிக்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கைகள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், இலங்கையில் நிறுத்தப்பட்ட திட்டங்களை ஜப்பான் உடனடியாக மீள ஆரம்பிக்கும்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் எனவும், கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷாக்சினி
