கொலன்ன – கேல்ல பகுதியில் இறக்குவானை பிரதான வீதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று(9) இரவு இடம்பெற்றதாகவும், தேயிலை தோட்ட உரிமையாளரான 61 வயதுடைய நபர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொலன்ன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
எம்.எப்.எம்.அலி
இரத்தினபுரி நிருபர்
