அவுஸ்திரேலியா சிட்னியில் நிலைநாட்டப்பட்ட வள்ளுவர் சிலை !
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான “பெண்டில் ஹில்” பகுதியில் நகரின் பொது இடமொன்றில்
தமிழரின் அடையாளமாக திகழும் திரு வள்ளுவரது சிலை அமைக்கப் பட்டுள்ளது.
கம்பர்லாண்ட் கவுன்சில் நிருவகித்து வரும் இப்பிரதேசத்தில் இந்த வள்ளுவர் சிலையினை அமைப்பதற்காக இலங்கையின் மலையக தமிழர் பின்னணியைக் கொண்ட டாக்டர் திருமதி சந்திரிகா சுப்ரமணியம் அம்மையாரின் 3 ஆண்டுக்கால கடின முயற்சியால் இவ்வெற்றி சாத்தியப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது
டாக்டர் திருமதி சந்திரிகா சுப்ரமணியம் அவர்கள் தொழிலில் ஒரு சட்டத்தரணியாக இருந்தாலும் தமிழ் குறித்து அதிக பற்று கொண்டவராக திகழ்பவர் மேற்படி நபர் அவுஸ்திரேலியாவில் இருந்துகொண்டே மலையகம் உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு மக்களுக்கும் தன்னாலான உதவிகளையும் செய்து வருவதோடு அவுஸ்திரேலிய நாட்டில் தமிழ் தொண்டு ஆற்றி வருபவராக சிட்னி வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவராக திகழ்கிறார்
சாதி மதம் கடந்து தமிழரை தமிழனாக அடையாளப் படுத்துவதிலும் புலம்பெயர் தேசங்களில் தமிழையும் தமிழர் பாரம்பரியத்தையும் விதைப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள டாக்டர் திருமதி சந்திரிகா சுப்ரமணியம் அவர்களின் இந்த மகத்தான சேவையை பாராட்டுவதோடு உலகத் தமிழர் சார்பில் நன்றியும் பாராட்டுக்களும் !
தகவல்:
சிட்னி மூர்த்தி Sundar Moorthy
-கேஜி
