யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகச் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
