எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 157 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கோபா மண்டலத்தில் பெய்த கனமழையால் தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை பிற்பகுதியில் 55 ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 157 ஆக உயர்ந்துள்ளது.
அப்பகுதியில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத் தலைவர் தெரிவித்தார். திங்கள்கிழமை காலை முதல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேற்றில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவால் ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.
