ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
