பெங்கிரிவத்த புகையிரத நிலையம் தொடக்கம் பாதுக்க புகையிரத நிலையம் வரைக்கும் களனிவெலி புகையிரதப் பாதை ஒதுக்கிடத்தில் குடியேறியுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு வீட்டுவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கொழம்பகே மாவத்தை வீடமைப்பு தொகுதி மற்றும் புகையிரத வேலைத்திட்டத்தின் மூலம் கொட்டாவ மாலபல்ல நிர்மாணிக்கப்பட்டுவரும் வீடமைப்புத்தொகுதின் வீட்டு அலகுகளை பயன்படுத்தி குறித்த குடும்பங்களுக்கு வீட்டுவசதிகள் வழங்கப்படவுள்ளது.
பெங்கிரிவத்த புகையிரத நிலையம் தொடக்கம் பாதுக்க புகையிரத நிலையம் வரைக்குமான பகுதியின் புகையிரத ஒதுக்கிடத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர்களில் அதிக சதவீதமானோர் 30 ஆண்டுகளுக்கு மேலாக புகையிரத ஒதுக்கிடத்தில் பாதுகாப்பற்ற விதத்தில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.
அவர்களில் 350 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அடையாளங்காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக (05.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
6. பெங்கிரிவத்த புகையிரத நிலையம் தொடக்கம் பாதுக்க புகையிரத நிலையம் வரைக்கும் களனிவெலி புகையிரதப் பாதை ஒதுக்கிடத்தில் குடியேறியுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றல்
கொழும்பு நகரை அண்டிய புகையிரத வீதி வேலைத்திட்டத்தின் கீழ் உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி மாளிகாவத்தை லொகோ சந்தியிலிருந்து பாதுக்க புகையிரத நிலையம் வரைக்கும் புகையிரதப் பாதை ஒதுக்கிடத்தில் குடியேறியுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை மீள்குடியமர்த்தப்படுவதுடன், தற்போது கிருலப்பன புகையிரத நிலையம் வரைக்குமான பகுதியில் சட்டவிரோத குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பெங்கிரிவத்த புகையிரத நிலையம் தொடக்கம் பாதுக்க புகையிரத நிலையம் வரைக்குமான பகுதியின் புகையிரத ஒதுக்கிடத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர்களில் அதிக சதவீதமானோர் 30 ஆண்டுகளுக்கு மேலாக புகையிரத ஒதுக்கிடத்தில் பாதுகாப்பற்ற விதத்தில் சட்டவிரோதமாக வசித்து வருவதுடன், அவர்களில் 350 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கொழம்பகே மாவத்தை வீடமைப்பு தொகுதி மற்றும் புகையிரத வேலைத்திட்டத்தின் மூலம் கொட்டாவ மாலபல்ல நிர்மாணிக்கப்பட்டுவரும் வீடமைப்புத்தொகுதின் வீட்டு அலகுகளை பயன்படுத்தி குறித்த குடும்பங்களுக்கு வீட்டுவசதிகளை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.