Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

August 19, 2026

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026

நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட த்துறை மாணவர்கள் குழு ஜனாதிபதியை சந்தித்தது
இலங்கை

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட த்துறை மாணவர்கள் குழு ஜனாதிபதியை சந்தித்தது

ThanaBy ThanaAugust 8, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு  (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகர், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சூழவுள்ள கல்வி முக்கியத்துவம் வாய்ந்த விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதற்கமைய இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் 280 பேர் நேற்று (06) களப்பயணத்தில் இணைந்து கொண்டதுடன் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர், ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்கு வாய்ப்வு வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். ஜனாதிபதி தனது வேலைப் பழுவைப் பொருட்படுத்தாமல் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்ததுடன் அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

அவர்களின் கல்விச் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி சட்டவாக்கம்,நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை தொடர்பில் மாணவர்கள் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்ததுடன், அவர்களை தெளிவுபடுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் ஜனாதிபதி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் பிம்பா திலகரத்ன, ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    இலங்கை காவல்துறை வெளியிட்ட வாடகை வாகனப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026
    Editors Picks

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியா நோக்கி இரவு நேர பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.