சர்வதேச ஆயுர்வேத விரிவுரைகள் மற்றும் கல்வி வர்த்தக கண்காட்சி இன்று (09) ஆரம்பமாகவுள்ளதுடன் கண்காட்சி எதிர்வரும் 11 ஆம் திகதி வரை காலி மாநகர சபை மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் இலவசமாக கலந்துகொண்டு, வெளிநாட்டு கல்விக்கான உதவிகள், 90 க்கும் மேற்பட்ட சுகாதார கல்வி நிலையங்களை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கொன்சல் ஜெனரல் இந்திய உயர்ஸ்தானிகர் ஹர்விந்தர் சிங், கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எச்.டி.கருணாரத்ன, கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கமல் பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.