ரீ-56 ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்களுடன் சிறைக்காவலர் ஒருவர் ராஜகிரிய பகுதியில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்களில் 350 ரீ-56 ரக தோட்டாக்களும் 50 ஒன்பது மில்லிமீற்றர் ரவைகளுடன் 15.56 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்த 8 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சுமார் 6 கிராம் ஹெரோயின், 700 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 200 மில்லிகிராம் குஷ் ரக போதைப் பொருள் என்பனவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
