1,700 ரூபாய் நாளாந்த வேதனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை எடுப்பதற்காக வேதன நிர்ணய சபை மீண்டும் கூடவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது ஜனாதிபதியே தொழில் அமைச்சராகவும் இருக்கின்ற நிலையில், இது சார்ந்த அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.1,700 ரூபாய் நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியிலிருந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, புதிய யோசனை நாளையதினம் முன்வைக்கப்படும் என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்ட்டுள்ளார் .
