எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, இன்று (11) நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது .
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர், தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து பிரதான வேட்பாளர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானம் எட்டப்படும் என தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துடன் கட்சியின் அனுமதியின்றி, தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் பொது வேட்பாளராகக் களமிறங்குவதற்கு சம்மதித்தமைக்கு எதிராக, பா. அரியநேத்திரனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
