2024ம் ஆண்டுக்கான CYMBRU PREMIER LEAGUE கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் திகதி சனிக்கிழமை நுவரெலியா சினிசிட்டா விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
லிந்துலை – கேம்பிரி மேற் பிரிவு மற்றும் கீழ் பிரிவு வீரர்களை உள்ளடக்கி மொத்தமாக ஆறு அணிகள் மோதிய இந்த போட்டியில் கிம்ப்ரு கிங்ஸ் அணி மற்றும் கிம்ப்ரு ராயல்ஸ் அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் சிறந்த முறையில் களத்தடுப்பிளும் துடுப்பாட்டத்திலும் ஈடுபட்ட கிங்ஸ் அணி ராயல்ஸ் அணிக்கு 16 பந்துகளுக்கு 31 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது.
ஆடுகளத்தில் அதிரடி காட்டிய ராயல் அணி 32 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் என்று வெற்றியை தனதாக்கி 2024 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது.
சினி சிட்டா மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டி நிகழ்ச்சிகளில் பரிசளிப்பு நிகழ்வு அன்றைய தினமே நடந்து முடிந்தது. இதில் சிறந்த இளம் விளையாட்டு வீரனாக கவினாஸ் தெரிவு செய்யப்பட்டதோடு சிறந்த பந்துவீச்சாளராக கிஷோனும் சிறந்த துடுபாட்ட வீரராக சதீஸ் குமாரும் சகல துறை ஆட்டக்காரராக சிவதர்ஷனும் தெரிவு செய்யப்பட்டு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-ரா.கவிஷான்-