இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் திலகரத்ன டில்ஷான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன மற்றும் அவரது மனைவி திருமதி அப்சரி திலகரத்ன ஆகியோரும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
