- தோட்டத் தொழிலாளர்களை குளவி கொட்டியதில் தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெர்கஸ்வேல்ட் தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த 18 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்நிலையில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 10 தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குளவி கொட்டு தாக்குதலில் கவலைக்கிடமான நிலையில் இருந்த எட்டு பேரை பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
