கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடமையாற்றிய 31 வயது பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரி கடந்த சில நாட்களாகக் கொல்கத்தா முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்
பல்வேறு மருத்துவ சங்கங்களும் நேற்று நாடு முழுவதும் பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படக் கூடாது என இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
