நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
அக்குரஸ்ஸவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இதன்போது அறிவித்துள்ளார்.
