Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

August 19, 2026

19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

August 19, 2026

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வேலுகுமார் எடுத்த முடிவு சரியானதாகும்
இலங்கை

வேலுகுமார் எடுத்த முடிவு சரியானதாகும்

ThanaBy ThanaAugust 18, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுத்து, இலங்கையை அபிவிருத்தி திசைநோக்கி அழைத்துச்செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சியை கையளிக்கும் முடிவை மக்கள் எடுத்துவிட்டனர். எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி இது உறுதியாகும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தொகுதி அமைப்பாளரும், கொத்மலை அரசியல் அதிகார சபையின் உப தலைவருமான சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பல்வேறு தடைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கின்றது. சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு பெருந்தோட்ட மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சின்னம் ‘கேஸ் சிலிண்டராகும்’. இற்றைக்கு ஈராண்டுகளுக்கு முன்னர் ‘கேஸ்’ வாங்குவதற்கு வரிசைகளில் கால்கடுக்க காத்திருந்தமை மறக்கமுடியாது.  வரிசைகளில் நின்று உயிரிழந்தும் உள்ளனர். அந்த கொடூரமான வரிசை யுகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முடிவு கட்டினார். அதுமட்டுமல்ல வங்குரோத்து நிலையிலிருந்து இந்நாட்டையும் மீட்டுள்ளார்.

சவாலை ஏற்காது, ஓடி ஒளிந்த வாய்ச்சொல் வீரர்களுக்கு மத்தியில் சவாலை ஏற்று, சொல்லில் அல்லாமல் செயலில் காட்டியவர்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதனால்தான் நாடு இன்று முன்னேறிவருகின்றது. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து, அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு மக்கள் ஆணை வழங்குவார்கள். நாட்டில் எட்டு திக்கிலும் ஜனாதிபதிக்கான ஆதரவு அலை அதிகரித்துவருகின்றது. நாம் பட்டபாடுபோதும், மீண்டும் வரிசை யுகம் தேவையில்லை, மாற்று வேட்பாளர்களுக்கு வாக்களித்து பரிசோதனை செய்துகொண்டிருப்பதற்காக காலம் இதுவல்ல என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தைக்கூட கைப்பற்றுவதற்கு சிலர் முற்பட்டனர். ஆனால் அதனை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தையும், சட்டம், ஒழுங்கையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்தார். அவர் இல்லாவிட்டால் பங்களாதேஷில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையில் ஏற்பட்டிருக்கும். இன்று ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சுதந்திரமாக பிரச்சாரம் செய்கின்றன. இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே காரணம்.

நாட்டின் அபிவிருத்தி கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு வேலுகுமார் எடுத்த முடிவு சரியானதாகும். மக்களும் அதனை வரவேற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நான் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.” – என்றார்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    இலங்கை காவல்துறை வெளியிட்ட வாடகை வாகனப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026
    Editors Picks

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.