திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன – மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (18) பிற்பகல் ஹக்மனயில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 54 வயதுடைய திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி ஆகியோர் புஹுல்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
