எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் இது 60-70% வரை உயரும் என்றும் அவர் கூறினார்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
