பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததை தொடர்ந்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பமாகி நவம்பர் 22 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
