தெதுறு ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த தாய் மற்றும் அவரது மகனின் சடலங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.
தெதுறு ஓயாவில் நேற்று பிற்பகல் தாயொருவரும் அவரது இரண்டு மகன்களும் நீராடச் சென்றிருந்த நிலையில்
அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி நேற்றைய தினம் உயிரிழந்தார்.
ஏனைய இருவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தேடப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் தாய் மற்றும் அவரது மகன் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
