பங்களாதேஷில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 5.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தினால் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷிலுள்ள மக்கள் தங்குமிடம், உணவு, சுத்தமான நீர் போன்ற அடிப்படை வசதிகளின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல வீதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து உதவிகளையும் அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
