வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு கொழும்பில் இன்று இடம்பெற்றது.
34 துறைகளை மையப்படுத்தி இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, தமது அரசாங்கத்தில் அமைச்சரவை தொடர்பான உயரிய கட்டுப்பாடுகள் அமுலாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களுக்குக் கூடுதல் அதிகாரம் கொண்ட அமைச்சுப் பொறுப்பும், ஜனாதிபதிக்கு நெருக்கமில்லாதவருக்குக் குறைந்த அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படுகிறது.
ஒரு அமைச்சருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ள போதும், அந்த அமைச்சின் ஆதாரமாக இருக்கின்ற விடயதானங்கள் ஜனாதிபதியின் வசமே இருக்கின்றன.
இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.
தமது அரசாங்கத்தில் 25 அமைச்சர்களும், அவர்களுக்கான பிரதி அமைச்சர்களும் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள்.
அமைச்சுப் பொறுப்புகள் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
