போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் தொடர்பான விசாரணைகள் இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சீ.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்களின் தகவல்படி தெலுங்கானா மாநிலத்தை மையப்படுத்தி இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெலுங்கானாவில் நூற்றுக் கணக்கான கடவுச் சீட்டுகள் போலி ஆவணங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த முறைப்பாடுகளுக்கு அமைய இறுதியாக விநியோகிக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய கடவுச் சீட்டுகளை இரத்துச் செய்வதற்கான உத்தரவு இந்திய வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.
இவ்வாறான கடவுச் சீட்டுகளை வழங்குவதற்கு இலங்கையர்களது கல்வி சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் முக்கியமான காவல்துறை அதிகாரிகள் துணைநின்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த விசாரணைகளை சீ.பி.ஐக்கு மாற்றியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
