நாட்டில் தற்போது அநீதியான வகையில் வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
குருநாகல் – ரிதீகம பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வரி அதிகரிப்பானது தொழிற்துறையினர், விவசாயிகள் மற்றும் சாதாரண பிரஜை ஆகியோரை வெகுவாக பாதிக்கின்றது.
நாட்டின் சில தலைவர்கள் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக இரண்டு யுக்திகளைக் கையாள்கின்றனர்.
ஒருபுறம் அநீதியான வகையில் வரி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும், மறுபுறம் அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என கருதுகிறார்கள்.
நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் வகையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எதிர்கால சந்ததியினரின் வளமான எதிர்காலத்துக்கான பொறுப்பைத் தாம் ஏற்கவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
