நேற்றிரவு (27 ) வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வந்த மக்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் நெடுநேரமாக காத்திருந்தனர்.இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அண்மையில் அறிவித்தது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அதன் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
