Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

August 19, 2026

19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

August 19, 2026

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த இளைஞனை சந்தித்த ஜனாதிபதி
இலங்கை

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த இளைஞனை சந்தித்த ஜனாதிபதி

ThanaBy ThanaAugust 30, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் (28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இவர் தனது கிராமமான பேருவளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து, நாட்டைச் சுற்றி 1500 கிலோமீட்டர் தூரம் நடந்து இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். அதன்போது பேருவளை, அம்பலாங்டிகொடை, மிரிஸ்ஸ, ஹிரிகெட்டிய, ரன்ன, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலான்டுவ, பொத்துவில், நிந்தவூர், செங்கலடி, நிலாவெளி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, சுன்னாகம், மன்னார், மெதவச்சி, அநுராதபுரம், புத்தளம், கொழும்பு, மாரவில, நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய முக்கிய நகரங்களைக் கடந்து பேருவளைக்குத் திரும்பினார்.

அந்த நடை பயணத்தின் மூலம், இலங்கை அமைதியானது என்பதையும், எந்தவொரு நபரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நாட்டில் பயணிக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதே அவரது நோக்கமாக இருந்தது.

இந்த பயணத்தின் போது, சமூக வலைதளங்கள் மூலம் தான் பயணிக்கும் இடங்களை பார்வையாளர்களுக்கு தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாக, இலங்கையில் உள்ள அழகான சுற்றுலாத் தலங்கள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான மக்களுக்குத் தெரியப்படுத்தவும், அதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு அதிக விளம்பரத்தை பெற்றுக் கொடுக்கவும் முடிந்தது.

இச்சந்திப்பில், இந்த இளைஞனின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி, அவருக்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கினார். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் காலங்களில் அவரின் செயலூக்கமான பங்களிப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    இலங்கை காவல்துறை வெளியிட்ட வாடகை வாகனப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026
    Editors Picks

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.