அவிசாவலையில் கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்திலே சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 43 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலையுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
