மடுல்கலை நிருபர்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்டி மாவட்டத்தில் அரச அதிகாரிகளால் தபால் மூல வாக்குகள் குறிக்கும் பணி இன்று காலை ஆரம்பமானது.
கண்டி மாவட்ட செயலகம், கண்டி தலைமையக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டனர்.
கண்டி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,191,399 ஆகவும் பதிவான தபால் வாக்குகளின் எண்ணிக்கை 55,797 ஆகவும் உள்ளது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.
கண்டி மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட செயலாளர் திரு.சந்தன தென்னகோன் அவர்களின் மேற்பார்வையில் தபால் வாக்குகள் குறிக்கப்பட்டன.