பாடசாலை மாணவர்களுக்கான தேசிய போசாக்குக் கொள்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27 (2) இன் கீழ் முன்வைத்த தேசிய போஷாக்கு கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த திட்டம் அவசியம் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவே இதுவரை அவசியமான வகையில் தேசிய போசாக்கு கொள்கை ஒன்று ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2005 இலிருந்து 2010 வரை தான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்ததாகவும், இப்போசாக்குக் கொள்கை சுற்று நிருபங்களுக்கு அமைவாக பாடசாலைகளில் போசாக்கு கொள்கை தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு நபர்களுக்கும் அவசியமானவாறு பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு வேளை தொடர்பாக தீர்மானிக்க முடியாது என்றும், போசனை மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய உணவு தொடர்பாக திட்டம் தயாரிக்கப்பட்டு, பகல் உணவாக வழங்கப்பட்டு 17000 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு வருவதாகவும் அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த தெளிவுபடுத்தினார்.
தமக்கு விருப்பமான வகையில் போசாக்கு கொள்கையை தயாரிக்க முடியாது. ஐந்து நாட்களுக்கான உணவு திட்டத்தை தயாரிக்கும் போது தேசிய வகையிலான மரக்கறி வகைகள், புரத, மாச்சத்து உணவுகள் என சகல அவசியமான போசனைகளும் அடங்கியதாகவே இந்த உணவு வேளைகள் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் 8000 பாடசாலைகளில் இவ் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சில இடங்களில் பாடசாலைகளிலேயே உணவு தயாரிக்கப்படுவதுடன் சிலர் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கி உணவுகளை பல்வேறு வகையாக தயாரித்து வருகிறார்கள்.
எவ்வாறாயினும் 2025 ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்னிலையில் இருந்தாலும், இந்த போசாக்கு நிகழ்ச்சி திட்டத்தை இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேசத்திலும் அவசியமானதனால் தொடர்ந்து முன்னெடுத்ததாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.