பொகவந்தலாவ பகுதியில் தந்தையால் மகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் தாயால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாயின் முறைப்பாட்டை தொடர்ந்து தந்தையை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்து இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளனர்.
கடந்த 2023 ம் ஆண்டு தொடக்கம் தனது சொந்த மகளை பல முறை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக மகள் தாயிடம் கூறியதை தொடர்ந்து தாய் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு அங்கு மகப்பேற்று வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்த பட உள்ளார் என பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
