Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

August 19, 2026

19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

August 19, 2026

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » களுபோவில வைத்தியசாலையில் அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட வசதிகள் விஸ்தரிப்பு
இலங்கை

களுபோவில வைத்தியசாலையில் அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட வசதிகள் விஸ்தரிப்பு

ThanaBy ThanaSeptember 6, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட மிலேனியம் விடுதிக் கட்டடத் தொகுதி அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட பிரிவுகள் உட்பட நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவுகள் பல மக்கள் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டன.

சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீப்பாலவின் தலைமையில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்று (05) இடம் பெற்றது.
சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவின் யோசனைக்கு இணங்க அரசாங்க வைத்தியசாலைகளின் பொறிமுறையை மேலும் பரவலாக்குதல் மற்றும் குறித்த வசதிகளை குறைபாடுகளின்றி சிகிச்சைக்காக வழங்கும் நோக்கத்துடன்   வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து உடனடி தீர்வாக  தரமான மற்றும் முறையான சுகாதார சேவையை மக்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சினால்  இவ்விசேட வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரச் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால, சுகாதார சேவைப்  பணிப்பாளர் நாயாகம் வைத்தியர் அசேல குணவர்தன உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கடந்த காலங்களில் வைத்தியசாலையில் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் சிகிச்சை செயற்பாடுகளை மேற்பார்வை செய்ததன் பிரதிபலனாக மேற்படி பிரிவுகள் விரைவாக நோயாளர்களுக்கான சிகிச்சை விரைவுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்வதற்கு  இச்சந்தர்ப்பம் கிடைத்தது.
இதன் போது சுகாதார  செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால உரையாற்றுகையில் கல்கிஸ்ஸை – தெஹிவளை மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பிரதான வைத்தியசாலையான களுபோவில கொழும்பு தெற்கு போதன வைத்தியசாலைக்கு சிகிச்சை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு தினமும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வருகை தருவதுடன்,  குறித்த அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட  பிரிவுகளி ன் சிகிச்சை சேவைகளை விஸ்தரித்து   வைத்தியசாலை ஊடாக சிறந்த  சுகாதார சேவை வழங்குவதன் மூலம் மேலும் பலப்படுத்த வேண்டும்  எனக் குறிப்பிட்டார்.
மேலும் வைத்தியசாலையில் சிறிய புனர்நிர்மான செயற்பாடுகள் போன்ற வைத்தியசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியவசிய கொள்வனவுகளுக்காக சுகாதார அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலும் 500  நோயாளர்களுக்கான கட்டில்களை இந்த விடுதிக்  கட்டடத் தொகுதிக்கு  வழங்குவதாகவும் இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்  வைத்தியர்  சாகரி கிரிவந்தெனிய  சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சாலிந்த பண்டார, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (விநியோகம்) தினிப்ரிய ஹேரத் மற்றும் விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலையின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    இலங்கை காவல்துறை வெளியிட்ட வாடகை வாகனப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026
    Editors Picks

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.