Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

August 19, 2026

19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

August 19, 2026

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்று பல பெண்களிடம் சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
இலங்கை

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்று பல பெண்களிடம் சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

ThanaBy ThanaSeptember 7, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அனுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்று பல பெண்களிடம் கத்தியை காட்டி சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரத்தை சேர்ந்த ஒரு இளைஞனும், திருடப்பட்ட தங்க நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவை சேர்ந்த இரு வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா தோணிக்கல் பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இளைஞன் பெண்ணின் கழுத்தில் இருந்த மூன்று பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து சென்றுள்ளான். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்கா (37348), திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான உபாலி (10945), தயாளன் (9792), ரணில் (81010), பொலிஸ் கொன்ஸ்தாபில் கால்கே (9200) அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அனுராதபுரத்தை சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தில் கைது செய்திருந்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது குறித்த இளைஞனிடம் இருந்து அனுராதபுரத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டதுடன், குறித்த திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில் அனுராதபுரம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும், ஒரு சங்கிலியும், மிகிந்தலை பகுதியில் மூன்று சங்கிலியும், பரசண்கஸ்கல பகுதியில் ஒரு சங்கிலியும், பூனாவப் பகுதியில் ஒரு சங்கிலியும், பூவரசங்குளம் பகுதியில் ஒரு சங்கிலியும், உலுக்குளம் பகுதியில் ஒரு சங்கிலியும், தோணிக்கல் பகுதியில் ஒரு சங்கிலியும் என 9 இடங்களில் குறித்த இளைஞனால் சங்கிலிகள் அறுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

அத்துடன், திருடப்பட்ட நகைகள் வவுனியா நகர் பகுதியில் உள்ள நகை விற்பனை நிலையங்கள் இரண்டில் உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், இரு நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு வேறு பல குற்றச்செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பல்வேறு நீதிமன்றங்களில் 6 பிடியாணைகள் காணப்படுகின்றன. அதில் நான்கு திறந்த பிடியாணையும், இரண்டு நாள் பிடியாணையும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மற்றும் கடை உரிமையாளர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    இலங்கை காவல்துறை வெளியிட்ட வாடகை வாகனப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026
    Editors Picks

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.