Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

September 21, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

September 21, 2026

சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » திடீர் சுகயீனம் காரணமாக 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Breaking

திடீர் சுகயீனம் காரணமாக 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ThanaBy ThanaJanuary 11, 2025Updated:January 11, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் தொடர்பாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் (11.01.2025)  குறித்த பாடசாலைக்கு சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேற்படி, பாடசாலையில் 1,2ஆம், 3,4ஆம் மற்றும் 5ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் 50 பேரே இவ்வாறு, திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.

குறித்த மாணவ, மாணவிகளுக்கு நேற்று (10.01.2025) மாலை முதல் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

50 மணாவர்களில் 25 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையிலும், ஏனைய 25 மாணவர்கள் அட்டன் நகரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 25 மாணவர்களில் 22 மாணவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள மூன்று மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை (10.01.2025) பாடசாலையில் மாணவர்களுக்கு காலை உணவாக சோறு, போஞ்சி, பருப்பு மற்றும் கீரை ஆகியவற்றை வழங்கியதாகவும், எனினும், அந்த உணவை சாப்பிடாத மாணவர்களும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால், பாடசாலையில் உள்ள குடிநீரினால் எதுவும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்த அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் (11.01.2025) பாடசாலைக்கு விஜயம் செய்து குடிநீர் மாதிரிகளை சேகரித்துள்ளதோடு, தொடர்ந்தும் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026

    சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

    September 21, 2026

    லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம்.

    September 21, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.