உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று (03) நள்ளிரவுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதி காலமாகக் கருதப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவுக்குப் பிறகு தேர்தல் நாள் வரை எந்தவொரு பிரச்சார நடவடிக்கையும் தேர்தல் சட்டத்திற்கு அமைய தடைசெய்யப்பட்டுள்ளது.
