100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த உலக வர்த்தகத்தின் முக்கிய கடல் எல்லையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி அறிவிப்பை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாகக் கடந்த மே மாதம் மசகு எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டிருந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படவுள்ளதாக வெளியான தகவல்களால் கடந்த சில நாட்களாக விலை படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
